ஆறுமுகம் ஜாகிர் உசேன் இடம் மாறி உடல் அடக்கம்
கடலூர் மாவட்டம்
சிதம்பரம் அருகே
ஆதிவராக நத்தம்
கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் வயது 52.
இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு
கடலூர் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.
செவ்வாய் இரவு அவர் இறந்தார்.
அதே வார்டில் சிகிச்சை பெற்ற
பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த
ஆறுமுகம் என்ற 51 வயதுக்காரரும்
அதே நாளில் நள்ளிரவில் இறந்தார்.
இருவரது உ டல்களும்
கடலூர் அரசு மருத்துவமனையின்
சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.
புதன்கிழமை காலையில்
இருவருடைய குடும்பத்தாரும் வந்தனர்.
அவர்களிடம் உடல்கள்
கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி,
பிளாஸ்டிக் பையில் வைத்து
ஒப்படைக்கப்பட்டது.
ஜாகிர் உசேன் குடும்பத்தார்
ஊருக்கு உடலை கொண்டு சென்றனர்.
தங்களது மதவழக்கப்படி
உடலடக்கம் செய்தனர்.
ஆறுமுகம் உடலை அவர்
குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு
சென்றனர். கடைசியாக ஒரு முறை
முகத்தைப் பார்க்க நினைத்த குடும்பத்தார்
பார்சலை பிரித்தபோது அது
ஆறுமுகம் உடல் இல்லை என்பது தெரிந்தது.
உடனே சடலத்தை
மருத்துவமனைக்கு
கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
அதன் பிறகுதான்
ஜாகிர் உசேன், ஆறுமுகம்
உடல்கள் மாறியது தெரிந்தது.
ஆறுமுகம் குடும்பத்தார்
ஜாகிர் உசேன் ஊருக்கு சென்றனர்.
நீங்கள் புதைத்தது ஜாகிர்
உசேன் உடல் அல்ல;
ஆறுமுகம் உடல்;
அதைத்தோண்டி எடுத்து தாருங்கள்
என ஆறுமுகம் குடும்பத்தினர்
கேட்டனர்.
அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவகாரம் போலீசுக்குபோனது.
போலீசார் விரைந்து சென்றனர்.
உடலை தோண்டி எடுப்பதால்
நோய் பரவாது என விளக்கிக் கூறினர்.
அதன்பிறகு, ஆறுமுகம் உடல்
தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.
விஷயத்தை அறிந்த ஜாகிர் உசேன்
குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு
சென்று சரியான சடலத்தை பெற்றனர்.
பிறகு இருவரது சொந்த ஊர்களில்
அவரவர் மத சம்பிரதாயப்படி
இறுதிச்சடங்குகள் நடந்தன.#Puthandu2021 #Corona #Death
April 15, 2021
oo0v6KC3uAc
டெல்லி முதல்வர் அறிவிப்பு
வெள்ளி இரவு முதல்
திங்கள் காலை வரை
ஊரடங்கு அமல்!
டெல்லி முதல்வர் அறிவிப்பு#delhicurfew #delhilockdown #arvindkejriwal
April 15, 2021
UYcOTWyZsHo
ஜோஜி| படம் எப்டி இருக்கு | Joji Movie Review | Dinamalar
ஜோஜி| படம் எப்டி இருக்கு | Joji Movie Review | Dinamalar# #Cinemareview #Jojimoviereview #DinamalarReview
April 15, 2021
ch1oqHZnWW4
தொட்டி இருந்தும் தண்ணீர் ஊற்றாத வனத்துறை
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனங்களில் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருந்து 200 க்கு மேலான யானைகள் இடம் பெயர்ந்து வந்துள்ளன.
இந்த யானைகள் ஒகேனக்கல், கோடுபட்டி வனங்களில் தண்ணீர் கிடைக்குமா, உணவு கிடைக்குமா என தேடி அலைகின்றன.
இது ஆண்டு தோறும் காணும் காட்சியாக இருந்தது. எனவே, யானைகளுக்கு என தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டன. அவற்றில் சோலார் பம்பு மூலம் தண்ணீர் நிரப்புவது வனத்துறையின் பொறுப்பு. ஆனால், அவர்கள் இதை செய்வதை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் தண்ணீர் இல்லை. வனங்களில் உள்ள தொட்டிகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் வெயில் தாங்க முடியாத யானைகள் தாகத்தில் தவித்து அலைமோதுவது பரிதாபமாக உள்ளது. கடந்த 10 நாட்களில் 2 யானைகள் மரணம் அடைந்து விட்டன.
கடும் வறட்சியால் காட்டில் செடி கொடிகள் கருகி விட்டன. சாப்பிடவும் யானைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் யானைகள் தண்ணீர் தேடி கூட்டம் கூட்டமாக இரவு நேரங்களில் ஊருக்குள் வருகின்றன. அவற்றின் நடமாட்டத்தால் பயிர்கள் நாசம் ஆகின்றன.
ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதி தொட்டிகளில் ரெகுலராக தண்ணீர் ஊற்ற வேண்டும்; கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
தேர்தல் முடிவு வந்த பிறகுதான் இதற்கு தீர்வு காண முடியும் என வனத்துறை சொல்கிறது. யானைகளுக்கு இந்த அரசியல் புரியுமா என தெரியவில்லை.#Puthandu2021 #Elephant #death
April 15, 2021
XxagKKuN6Qc
செய்தி சுருக்கம் | 8 AM | 15-04-2021 | Short News Round Up | Dinamalar
கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னையில் வீடு, வீடாக காய்ச்சல் கண்டறியும் பணியில் 12 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். வார்டுக்கு 2 முகாம்கள் வீதம் நகரில் 400 காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்படும். 12 பரிசோதனை மையங்கள் சனிக்கிழமை முதல் செயல்படும். கல்லூரிகளில் மீண்டும் கொரோனா மையங்கள் ஏற்பாடு செய்து, 12 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன என்றார்.
15 லட்சம் தடுப்பூசிகள் ஸ்டாக் இருப்பதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வர வேண்டும் என கமிஷனர் அழைத்தார்.#ShortNews #ChennaiRain #Murder
April 14, 2021
0Yl0pwqpGKI
இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 15-04-2021 | Sports News Roundup | Dinamalar
இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 15-04-2021 | Sports News Roundup | Dinamalar#SportsNews
April 14, 2021
d_nrfXozIzQ
மாஸ்க், இடைவெளியை மறந்தனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான
குக் வித் கோமாளி
சமையல் நிகழ்ச்சி மூலம்
பெரும் புகழ் பெற்றவர்
காமெடி நடிகர் புகழ்.
நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில்
தனியார் செல்போன் சர்வீஸ் சென்டர்
திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இதை அறிந்ததும் நூற்றுக்கணக்கான
இளைஞர்கள் கடை முன் திரண்டனர்.
கொரோனா வேகமாக பரவி வருவது
பற்றிய அச்சமே இல்லாமல்,
புகழுடன் செல்பீ எடுத்துக் கொள்ள
இளைஞர்கள் முண்டியடித்தனர்.
சமூக இடைவெளி அறவே இல்லை.
பெரும்பாலானவர்கள்
மாஸ்க் அணியவில்லை.
கூட்டம் முண்டியடிப்பதைக் கண்ட
போலீசார் விரைந்து சென்று
லேசாக தடியடி நடத்தி
ரசிகர்களை விரட்டினர்.
ஆனாலும் புகழ் கிளம்பிச் செல்லும் வரை
சமூக இடைவெளியை மறந்து
ரசிகர்கள் ஆட்டம் போட்டனர்.
கொரோனா விதிமுறைகளை மீறி
கூட்டத்தை கூட்டியதற்காக
அந்த கடைக்கு
அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் இன்று மட்டும்
7819 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர்;
அதில் திருநெல்வேலி, தூத்துக்குடி
மாவட்டங்களின் பங்கு 437.#Puthandu2021 #pugazh #CookuwithComalis
April 14, 2021
sFSTaOAkges
சினிமா பாடல்களை விட ஸ்டாலின் தான் வராரு பாட்டு சூப்பர் ஹிட்
சினிமா
பாடல்களை விட
ஸ்டாலின் தான் வராரு
பாட்டு சூப்பர் ஹிட்# #CinemaInterview
April 14, 2021
83vLnDhvzrQ
குறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும்
கொரோனாவின் முதல் அலையில் தப்பித்த பலர், இரண்டாம் அலையில் சிக்கிக்கொள்கின்றனர். பாதிப்பு அதிகரித்து
வருவதால் மருத்துவமனைகளில்
படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இதனால் யாரும் பதட்டம் அடைய
வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள் .
80 சதவீத நோயாளிகளுக்கு குறைவான பாதிப்பு
ஏற்படுகிறது . 20 சதவீத பேர் தான் சீரியஸ் நிலையில் அட்மிட் ஆகின்றனர் . கொரோனா பாசிடிவ் வந்தாலே அனைவரும் மருத்துவமனைகளில் அட்மிட் ஆக வேண்டும்
என அவசியம் இல்லை . குறைவான பாதிப்பு
இருந்தலே , பீதியில் அட்மிட் ஆவதால் தான் ,
சீரியஸ் நிலையில் உள்ளவர்களுக்கு ,
படுக்கை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும்
என்ற கவலை ஏற்படுள்ளது.
பாசிடிவ் ரிசல்ட் வந்தவுடன் , தெரிந்த டாக்டரிடம் தெரிவியுங்கள். நோயாளியின் வயது ,
அறிகுறிகளின் அடிப்படையில்
சி டி ஸ்கேன் , பிளட் டெஸ்ட் எடுக்க வேண்டிய
அவசியம் குறித்து அவரே சொல்லுவார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங் , மற்றும் வைட்டமின் மாத்திரைகள்,
சத்தான உணவு எடுத்துக்கொண்டு
இரண்டு வாரம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டாலே குணமாகும் என்கின்றனர் டாக்டர்கள் .
வீட்டில் ஆக்சிமீட்டர் வாங்கி வைப்பது
உதவியாக இருக்கும். தினமும் ஆக்சிஜன்
லெவல் செக் செய்துக்கொள்ளலாம் .
SPO2 அளவு 94க்கு கீழ் சென்றால் தான்
மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும் .
அறிகுறிகள் தெரிந்தால் , உடனே டெஸ்ட் எடுக்க வேண்டும் . நம்மால் மற்றவர்களுக்கு
பரவக்கூடாது என எண்ணம் ஆழமாக
பதிய வேண்டும் . ஊரடங்கு மற்றும்
அரசு கட்டுப்பாடுகளால் மட்டும் கொரோனா
ஒழிந்து விடாது . அனைவரும் மாஸ்க்
அணிவதும் , தடுப்பூசி போட்டுக்கொள்வதும் தான் கொரோன பரவலை தடுக்க ஒரே வழி .
இதை செய்யாவிட்டால் எத்தனை வருடங்கள்
ஆனாலும் , வைரஸ் ஒழியாது .#Puthandu2021 #Corona #testing #Positive
April 14, 2021
ckBrhRG3XLA
நான் ஹீரோவா...இல்லவே இல்லை ..யோகிபாபு
நான் ஹீரோவா...இல்லவே இல்லை ..யோகிபாபு# #Yogibabu #Cinemainterview
April 14, 2021
T4RZRq_rHIk
சுகாதாரத்துறை விளக்கம்
பல மாநிலங்களில்
கொரோனா தடுப்பூசி
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால்
தடுப்பூசி போடும் பணியில்
சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவரம் எப்படி?
உள்ளது என,
பொது சுகாதாரத்துறை இயக்குனர்
டாக்டர் செல்வநாயகத்திடம்
கேட்டபோது,
மத்திய அரசிடம் இருந்து
தடுப்பூசிகள் சீரான கால
இடைவெளியில்
வந்தவண்ணம் உள்ளது.
ஒரு வாரத்துக்கு தேவையான
தடுப்பூசிகள் நம்மிடம் இருக்கிறது
என்றார்.
இப்போதைய நிலவரப்படி,
தமிழக சுகாதாரத்துறையிடம்
11 லட்சத்து 50 ஆயிரத்து 450
தடுப்பூசிகள் உள்ளன.
9.4 லட்சம் கோவிஷீல்ட்,
2.1 லட்சம் கோவேக்சின்
கையிருப்பு உள்ளது என
டாக்டர் செல்வநாயகம் கூறினார்.#Health #Selvanayagam #Corona #Vaccine
April 14, 2021
i8L-jHVPcFk
12ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு
சிபிஎஸ்இ
10ம் வகுப்பு
தேர்வுகள்
ரத்து!
12ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு#Cbse #Hold #Exam #
April 14, 2021
ZUEYzkL1bTk
சுகாதார செயலர் பதில்
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியும் மிக முக்கியம் என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறிய அவர், லாக்டவுன் வர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கும் பதிலளித்தார்.#Puthandu2021 #radhakrishnan #health #secretary #Coronavirus
April 14, 2021
raFYNRvXZJQ
கொரோனா அச்சமின்றி ஹரித்துவாரில் 6 லட்சம் பேர் திரண்டனர் !
உத்தரகாண்டின் ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க பெரும் திரளான பக்தர்கள் வந்துள்ளனர்.
கும்பமேளாவுக்கு வருவோர், கொரோனா இல்லை என சான்றிதழ் கொண்டு வருமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது..
ஆனால் அதனை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை.
பலரும் மாஸ்க் அணியாமல் சாலையில் உலா வருகின்றனர்.
சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் கங்கை நதியில் நீராடினர்.
புத்தாண்டு தினமான இன்று கங்கையில் புனித நீராட 6 லட்சம் பக்தர்கள் ஹரித்துவாரில் திரண்டுள்ளனர்.
சேட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலம் இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்றின் 2 ஆம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், விதி முறைகளை காற்றில் பறக்க விட்டு ஹரித்துவாரில் பக்தர்கள் நடமாடுகின்றனர்.
சமூக இடைவெளியை கடை பிடிக்க வலியுறுத்தி, பலப்பிரயோகம் செய்தால் நெரிசல் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மட்டுமின்றி சாமியார்களும்,, சமூக இடைவெளியை அலட்சியம் செய்து, நதியில் குளிப்பதும், மாஸ்க் இன்றி நடமாடுவதும் சுகாதார அதிகாரிகளை கவலை அடையச்செய்துள்ளது. #Haridwar #Hugecrowd #Covid-19
April 14, 2021
0ajkijeEDbg
ஆபரணங்களுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்
நுகா்வோர் விவகார செயலா் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை.
எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும் என்றார்.#Gold #Halmark #LeenaNandan
April 14, 2021
SK6uoJNpsCY
தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
தங்க கவச
அலங்காரத்தில்
நாமக்கல்
ஆஞ்சநேயர்
சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.#Anjaneyar #Temple
April 14, 2021
__ZRgDhJA3k
ரஜினி அரசியலுக்கு வராதது அப்செட் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
ரஜினி அரசியலுக்கு வராதது அப்செட் தான்
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்# #CinemaInterview
April 14, 2021
xY0e_ncu0IY
செய்தி சுருக்கம் | 1 PM | 14-04-2021 | Short News Round Up | Dinamalar
புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் செய்தியில், “தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். அனைவரின் வாழ்விலும், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியை புத்தாண்டு கொண்டு வர, பிராத்திக்கிறேன்” என கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”புத்தாண்டு கொண்டாடும் தமிழ், வங்காளி, மலையாளி மக்களுக்கு என் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார். மற்ற நாடுகளில் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்#Shortnews #Dinamalar
April 14, 2021
_rhOQ0cZG0w
தேர்தல் ஆணைய வரலாற்றில் முதன் முறையாக !
மே.வங்கத்தில் உள்ள சிதால்குச்சியில் வாக்குப்பதிவின் போது மத்திய படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
. இதில் நான்கு பேர் இறந்து போனார்கள்.
மத்திய படையினரின் செயலுக்கு, ஹாப்ரா தொகுதி பா…ஜ.க.வேட்பாளர் ராகுல் சின்ஹா நியாயம் கற்பித்தார்.
''ஓட்டளிக்க வந்தவர்களை குண்டர்கள் தடுத்தார்கள்- எனவே மத்திய படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்- இது தவறு இல்லை'' என அவர் கருத்து தெரிவித்தார்.
அத்தோடு விட்டிருக்கலாம்.
விடவில்லை.
' நான்கு பேரோடு நிறுத்தி விட்டார்களே! எட்டு பேரை அல்லவா சுட்டு கொன்றிருக்க வேண்டும்'' என்று வாய் நீளம் காட்டினார், சின்ஹா.
இதோடு மட்டும் நிறுத்தவில்லை.
'' ஏன் நான்கு பேரை மட்டும் கொன்றீர்கள் என விளக்கம் கேட்டு மத்திய படையினருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்”' என்றும் வார்த்தைகளை கொட்டினார்.
சின்ஹா இப்படி பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அவர் பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் 2 நாட்கள் தடை விதித்துள்ளது.
வழக்கமாக தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி பேசினால், விளக்கம் கேட்டு முதலில் நோட்டீஸ் அனுப்புவார்கள்.
ஆனால் விளக்கம் கேட்காமல் வேட்பாளர் மீது ஆணையம், நடவடிக்கை எடுத்திருப்பது இதுவே முதல் முறை.
'' விளக்கம் கேட்காமல் ஒரு வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்- அவர் இதனை எதிர்த்து கோர்ட்டுக்கு போனால் என்ன ஆகும் ?'' என தேர்தல் ஆணைய அதிகாரியிடம் கேட்கப்பட்டது.
''ஒரு வேட்பாளர் இப்படி பேசுவதை எங்களால் சகித்து கொள்ள முடியாது- அவர் கோர்ட்டுக்கு போகட்டும்- நாங்கள் பார்த்து கொள்கிறோம்'' என அந்த அதிகாரி பதில் அளித்தார்.#Puthandu2021 #RahulSinha #BJP
April 14, 2021
naydWrOTPA4
திரளும் பயணிகள் திண்டாடும் கண்டக்டர்கள் !
கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
'பஸ்களில் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி- நின்று கொண்டு பயணிக்க முடியாது'' என்பது முக்கியமான கட்டுப்பாடு.
இதனால் சென்னையில் பஸ் கண்டக்டர்கள் படும்பாடு, சொல்லி மாளாத ரகம்.
ஆபீசுக்கு போகும் அவசரத்தில், பயணிகள், கண்டக்டர்களுடன் மல்லுக்கு நிற்கிறார்கள்.
சண்டை போடுகிறார்கள்.
ஈவு, இரக்கம் பார்த்து ஒன்றிரண்டு பேரை ஸ்டாண்டிங்கில் அனுமதித்தால், பாதி வழியில் பஸ்களை மறித்து பரிசோதகர்கள் இறக்கி விடும் நிலை.
'' சென்னையில் 500 பஸ்கள் சும்மா தான் டெப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளன.- அந்த பஸ்களையும் கூடுதலாக இயக்க வேண்டும்' என்பது கண்டக்டர்கள் கோரிக்கை.
பயணிகளுடன் வாக்கு வாதம் செய்து தொண்டை வறண்டு போன சில நடத்துனர்கள்,'' டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடைகள் ஏற்படுத்தினார்கள்- போலீசாரை காவலுக்கு போட்டார்கள்- சென்னையிலு,ம் முக்கிய பஸ் நிறுத்தங்களில் அதே போன்ற ஏற்பட்டை செய்ய வேண்டும்'' என்கிறார்கள்.#lockdown_BUs
April 13, 2021
kdedl-u0Dic